விடாத வெட்கம்

தலையனை முழுதும்
தலைவனின் நினைவு...
சிலையென கிடந்தேன்
சில்லென கனவு...

விடாத வெட்கம்
விடுகதையாக...
மணாளன் நினைவு
தொடர்கதையாக...

தழுவும் தென்றலாய்த்
தானிங்கு வந்தான்...
தவழும் காற்றில்
ஸ்பரிசம் தந்தான்...

மயங்கிய நேரம் 
மனதினுல் வந்தான்...
கண் திறந்து பார்த்தால்
ஆழிப்பேரலையாய்
அசைவின்றி நின்றான்!

கயிர் இல்லாமல் என்
கை இரண்டை கட்டினான்...
உயிர் இல்லாத
மெய்யென மாற்றினான்...

விலகவா நான்
விலகவா?
விழுவதா இல்லை
அழுவதா?

(Weekend kavithigal - Anbarasu)

Comments

Popular posts from this blog

அம்மாயி (மறுபதிப்பு)

தங்க கொலுசு