Posts

Showing posts from June, 2020

தங்க கொலுசு

நடுநிசி இரவில் அன்பை யாசித்து  இரு கைகளை விரித்து   காத்திருந்த மனசு... கொலுசின் ஓசை காதுகளில்  ரீங்காரமாய் வழிந்தோட  பூத்ததிந்த உசுரு... அற்புதம் ஒன்று அரை நொடி பொழுதில் நிகழ... எதுவும் அறியாமல் மறைந்தது  அவள் கொலுசின் இசை மட்டும் அல்ல, அவளும்தான் !

விடாத வெட்கம்

தலையனை முழுதும் தலைவனின் நினைவு... சிலையென கிடந்தேன் சில்லென கனவு... விடாத வெட்கம் விடுகதையாக... மணாளன் நினைவு தொடர்கதையாக... தழுவும் தென்றலாய்த் தானிங்கு வந்தான்... தவழும் காற்றில் ஸ்பரிசம் தந்தான்... மயங்கிய நேரம்  மனதினுல் வந்தான்... கண் திறந்து பார்த்தால் ஆழிப்பேரலையாய் அசைவின்றி நின்றான்! கயிர் இல்லாமல் என் கை இரண்டை கட்டினான்... உயிர் இல்லாத மெய்யென மாற்றினான்... விலகவா நான் விலகவா? விழுவதா இல்லை அழுவதா? (Weekend kavithigal - Anbarasu)

அம்மாயி (மறுபதிப்பு)

அம்மாயி ( மறுபதிப்பு) அம்மாயிகிட்ட சொல்லீட்டு நாளைக்கு ஊருக்கு போலான்னுதா முந்தாநா வரைக்கும் நெனச்சிக்கிட்டு இருந்தேன். நா ஊருக்கு போய்ட்டா அதுதா பாவம் தனியா எல்லா வேலையும் செஞ்சு கஷ்ட்டப்படும். கோழிகூப்பட எந்திருச்சு பால கறந்து, மோர சிலுப்பி நாலூட்டுக்கு ஊத்தீட்டு,பண்டம் பாடி அவுத்து கட்டி, தீவனம் போட்டு, பெரியய்யன் கெணத்திலிருந்து முப்பது கொடம் தண்ணி சேந்தி தாளில ஊத்தீட்டு, கட்டுதரைல சாணி வளிச்சு, பட்டி ஆட்ட வெளிக்கொறைல உட்டுட்டு, ஊடு ஆசாரத்த கூட்டி கழுவி நருவுசு பண்ணி, நாய்க்கு சோறு போட்டுட்டு அப்பறந்தா கரசோறு சாப்பிடும். காச்ச தலவலின்னு ஒரு நாள் படுத்ததில்ல. வெள்ளிகெழம சந்தைக்கு தலைல கூட வெச்சுக்கிட்டு, சுருக்கு பைய இடுப்புல செறுகிட்டு  கூடய எறக்காம அஞ்சு கல்லு நடந்தே போய்ட்டு வந்துரும். அந்தகாலத்துலயே அம்பது பவுனு நகை போட்டு, பல்லாக்குல வெச்சு, வட்ட சொம்பு சாமானத்தோட சீறு வெச்சு  எங்கப்பிச்சிக்கு கட்டி குடுத்தாங்களாம் எங்க பாட்டைய்யன். அப்புச்சி இருந்தவரைக்கும் எல்லா பன்னாட்டும் அவுங்கதான். பண்ணயம் பாக்கறது, காசு பணம் கணக்கு வழக்குன்னு எல்லாம் அப்புச்சிதான். பக்கத்துகாட்ட...